அழகு

அழகு, அழகு அழகு என்று
ஏதோ சொல்லி சதா பிதற்றுகிறாயே
அது என்னவோ நான் அறியலாமா
என்றெனுள்ளம் என்னைக்கேட்டது
'ஐயோ உள்ளமே இதுகூட தெரியா
உனக்கு உள்ளம் என்று பெயர்வைத்து யாரோ
தினம் தினம் அவள் தரிசனத்துக்காக ஏங்குகின்றேனே
அதோ இன்றும் என்முன்னே போகின்றாளே
அந்த அழகு, நடமாடும் சிலை...... அவளைத்தான்...
அழகு அழகு என்று கூவி அழைத்தும் .....என்னை
ஒரு நொடியேனும் திரும்பி பார்க்காமல்
போகும் அந்த மோஹினியைத்தான் அப்படி
கூறி அலைகிறேன் நான்................
இப்போது உள்ளம் சொன்னது''அது சரி , அவள்
தோற்றத்தில் அழகிதான் ,நான் இல்லை
என்று சொல்லவில்லை, ஆனால் அவள்
உள்ளழகு.......அது உனக்கு எப்படி என்று
தெரியுமா என்றதே பார்ப்போம் .......நானும்
விழித்துக்கொண்டேன்....'
இப்போது எந்த அழகைத்தேட ? நான் கேட்டேன்
என் உள்ளத்தை..... அது சொன்னது
'உள்ளழகை தெரிந்துக்கொள் காதலிக்கும் முன்
என்றது ..................

இப்போது அழகியைத் தேடி நான் போகவில்லை
அந்த 'அழகியைத்' தேடி என்னுடன்
சேர்த்துவைப்பது என் பெற்றோர் பொறுப்பு
என்றுவிட்டு விட்டேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jan-19, 6:30 pm)
Tanglish : alagu
பார்வை : 139

மேலே