திருமண வாழ்த்து 1
திருமண வாழ்த்து
ஊர் போற்ற நடந்ததோ
உங்கள் திருமணம்
அதில்
பார் போற்ற இணைந்ததோ
இருமனம்
மணமாலை மாற்றும்போதே
உங்கள் மன மாலையையும்
மாற்றிக் கொண்டவர்கள் நீங்கள்
மணமகனே
அவள் உன் மனையல்ல
இணை என நினை
மணமகள்
அவன் உன் கணவனல்ல
உன் கண் அவன்
துணை என நினை
மணமகளே
நீ கழுத்தில் ஏந்து
ஆலய மஞ்சள் கயிறை
மணமகனே
நீ அறுவடை செய்
ஆயிரம் காலத்துப் பயிரை
இணைந்தது உங்கள்
இருவரின் கரம்
அது இறைவன் கொடுத்த வரம்
உங்கள் இருவரின் அறத்தால்
சிறந்தது இல்லறம்
பலர் வழக்கை நடத்திக் கொண்டிருக்க
நீங்கள் சோதனையிலும் வாழ்க்கை
நடத்திக் கொண்டு இருப்பதே
சாதனை தான்
இருவரும் இன்பங்களை
அள்ளி
வாழ்வில்
மகிழ்ச்சி பொங்கட்டும்
வைகையாய்த் துள்ளி
நிலவும் வானும்போல்
பூவும் தேனும்போல்
இணைபிரியாமல்
வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்