காத்திருக்கும் என் காதல்

காத்திருப்பதோடு மட்டுமில்லாமல்
காக்க வைத்தும் கொண்டிருக்கிறாய்!!!

பேருந்துக்காக நீ!
பேதையின் காதலுக்காக நான்!

சாலையின் ஓரமாய்
நின்று கொண்டிருப்பது என்னவோ நீ தான்!!
ஆனால்,பறந்து கொண்டிருக்கிறது
என் மனம்!!

பறந்து செல்லும் என் மனதை
உன் கையில் பிடித்து
உந்தன் மனதில் அடைத்து
நான் வாழும் காலம் முழுவதும்
என்னை காதல் செய்வாயா??

உன் பதிலுக்கு காத்திருப்பவனாக,

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (31-Jan-19, 8:09 pm)
பார்வை : 531

மேலே