பழகி மகிழ வேண்டும்

ஒட்டிய தாடையுமாய் உள்ளிழுத்த வயிறுமாய்
ஒவ்வொரு நாளும் எம் உடல் கூறும் மொழியோ
உண்ணும் பருக்கை ஒவ்வொன்றும் - தினம்
உதிரமாய் உடலோடு ஒன்றுபட்டு ஒட்ட வேண்டும்
பதறாமல் உண்ண வேண்டும் பல்லாண்டு வாழ
பலமாக உழைக்க வேண்டும் பாரபட்சம் இன்றியே
பழகி மகிழ வேண்டும் பரிதிக்கு முன் எழ வேண்டும்
அல்லில் அயரும் போது அல்லலின்றி துயில வேண்டும்
எள்ளளும் ஏளனமும் எல்லா நேரமும் வேண்டும்
எதற்கும் வெகுண்டெழும் எண்ணம் குறைதல் வேண்டும்
பஞ்சமா பாதகத்தின் அச்சம் நெஞ்சில் வேண்டும்
பெருமை சேரல் வேண்டும் ஏறு செயலால் இருத்தல் வேண்டும்.
––– நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (1-Feb-19, 7:57 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 754

மேலே