பகவத்கீதா வெண்பா கர்ம யோகம் 9 சுலோகம் 25 26 27

25 .
கர்மத்தைப் பற்றுடன் ஆற்றுவோன் அஞ்ஞானி
கர்மத்தை பற்றற்று ஆற்றிச்சான் றோன்உலகை
நற்பாதை யில்நடத்து வான் !

26 .
பற்றோடு ஆற்றுவான் தன்பணி யைப்பழித்து
பற்றற்ற கர்மபோத னைசெய்யா மல்சான்றோன்
அஃதைதான் செய்திடல்வேண் டும் !

27 .
குணத்தால் இயங்கும் இயற்கைச் செயல்கள்
குணத்தை இயக்குவோன் தானென் றகந்தையால்
எண்ணிடு வான்அறிவி லான் !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-19, 3:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே