பகவத்கீதா வெண்பா கர்ம யோகம் 10 சுலோகம் 28 29 30
28 .
புலன்வழி செல்லும் குணம்பெருந் தோளாய்
புலன்குணம் கர்மபேதம் தேர்ந்தநற் தத்வஞானி
பற்று அறுத்திருப் பான் !
29 .
பிரகிருதி யின்குணத்தில் மோகிக்கும் மந்தன்
பிரகிருதி கர்மத்தில் பற்றுளான்நற் புத்தியோன்
மந்தனை நீகுழப்பா தே !
30 .
கர்மமெல்லாம் என்னில்வை ஆத்மாவில் சித்தம்வை
துர்மமதை ஆசைநெஞ் சக்கொதிப் பின்றியே
போர்செய் திடுவாய்நீ யும் !
----கீதன் கவின் சாரலன்