கட்டளையிடு
எழுத நினைத்தேன்...
என்னைப் பற்றி
எழுத மறுத்தன
என் கைகள்.!
உன்னைப் பற்றிய
கைகள்
உன்னைப் பற்றிமட்டும்
எழுதுமாம்.!
ஆதலினால் காதலியே...!
ஒருநிமிடம் மட்டும்
என்கைகளுக்கு நீ கட்டளையிடு
என்சொத்து முழுமையும்
உனக்கே எழுதி
என்கை யெழுத்திட்டிட
என்கைகளுக்கு நீ கட்டளையிடு..!!!