சிறந்தது காதல்
அசைந்தாடும் சோலையிலே
அலைமோதும் மனங்கள்
பேசும் போது புரிகிறது
புத்தம் புதிய காதலென்று ,
இருவர் இடையில் இடைவெளி
அவள் கையில் புத்தகப்பொதி
அவன் கையிலோ மடிக்கணனி
பருவத்தில் ஏற்படும்
புனிதமான காதல் இதுதான் ,
ஆரம்பம் நல்லது அன்பு தெரிகிறது ,
அடுத்தவர் பார்க்கும்போது சிறிது குழப்பம்
அச்சமும், நாணமும் காதலுக்கு இயல்பு
காதல் ஒருவகை பருவக் கலையே
இக் கலையில்இதயங்கள் சங்கமம்
பிஞ்சு மனங்களின் இனம்புரியாக் கலை
இக்கலையில் மனிதன் ஆடிப்போகின்றான்,
இது புனிதமானது ,மனதை புரிந்து கொள்வது ,
இயல்பாக உருவெடுக்கும் இக்காதல்
இதயத்தின் கலையாக ஊறிவருகிறது
இது புனிதமானது புரிந்து கொண்டால்
புதுமை காணலாம், புது யுகம் படைக்கலாம்,
இருவர் மனமும் இணைய புதிய பாதை இது ,
புரிந்து கொண்டால் உலகில் சிறந்தது காதல் மட்டுமே
காதல் போற்றப்படத்தக்கது , வாழ்த்தவேண்டியது .