தெய்வங்களின் வெளி – -------------------------------------சிறுகதை,------------- வாசகர் கடிதங்கள்--------------------------குலதெய்வங்கள் பேசும் மொழி

ஜெ

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் கதை-கட்டுரை புத்தகத்தை இந்த புத்தாண்டில் துவங்கி நேற்று (04.02.2019) வாசித்து முடித்தேன். நாட்டார் கதைக்களுக்கும் இந்திய பண்பாடு மற்றும் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்பை விளக்கவே எழுதப்பட்ட தொடர் என்பதால் ஒவ்வொரு கதை-கட்டுரையின் முடிவில் அதற்கான தொடர்புப் புள்ளியோடே முடிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பிற்க்கும் படுகை சிறுகதைக்கும் தொடர்பு இருப்பதால் மறுபடியும் ‘படுகை’ சிறுகதையை வாசித்தேன். வடிவம் குறித்த தெளிவை பெறவே இந்த வாசிப்பு. படுகை ‘சிறுகதை’ என்ற வடிவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டது, தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் கதை-கட்டுரை வடிவத்தை மையமாகக் கொண்டது. தளத்தில் வெளியான “காலை நடையில்” வடிவம் கூட இந்த கதை-கட்டுரை வடிவத்தை நோக்கி வருவதாகவே உணர்கிறேன்.

புத்தகத்தை முடித்த அன்றே தற்செயலாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த ஒரு கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. இந்திய தேர்தல் வாக்கு இயந்திரம் பற்றிய கட்டுரையாக இருந்தாலும், மைய பேசு பொருள் என்பது தகவல்களும் அது சார்ந்த புரிதல்களும். ஜெவின் சிந்தனை மரபில் செல்ல வேண்டும் என்றால் “நீர்க்குமிழிகளின் வெளி”. அரசியல் கட்டுரைத் தொகுப்பான வலசைப் பறவை நூலில் உள்ள கட்டுரையின் தலைப்பு. இந்த கட்டுரையும் தகவல்களையும் புரிதல்களையும் பற்றியதே. தற்செயல் என்பதே இலக்கியத்தில் இல்லை போலும்.

உங்கள் கட்டுரையில் வரும் ஒரு கருத்து “அடுத்தகட்டமாக இணையம் வழியாக சமூகவலைத்தளங்கள் என்னும் ஊடகம் வல்லமை பெற்றுள்ளது. அச்சு ஊடகங்கள் அதை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்கள் எந்தவிதமான அறிவுப்பறிமாற்றத்திற்கும் ஆற்றலற்றவை” சமூக ஊடக வாயிலாக வாசிப்பைத் தொடரபவர்கள் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த தகவல்களை எப்படி “புரிந்து விளங்கிக் கொள்ளுதல்” என்ற நிலையில் குழப்பமே மிச்சம். அந்த குழப்பம் அதை ஆற்றலில்லாத வெற்று அரட்டை அடிக்கும் இடமாக மாற்றியிருக்கிறது.

நாட்டார் கதைக்களுக்கும் இது பொருந்தும். இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளையுமே ஒவ்வொரு தகவலாக எடுத்துக் கொண்டால், அதை என் வாழ்வின் பண்பாட்டு நோக்கில் எங்கு பொருத்திப் பார்க்க வேண்டும், அதை எவ்வாறு விளக்கிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவைத் தந்த புத்தகம்.

நன்றி
பலராம கிருஷ்ணன்.

அன்புள்ள ஜெ

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்- சமீபத்தில் வாசித்த முக்கியமான நூல். பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா சிறுதெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பதை தடைசெய்தபோது நான் கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளன். சிறுதெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுக்கவேண்டும் என்று கம்யூனிஸ்டுக் கட்சி களமிறங்கியது. நானும் களமாடினேன். காரணம் கிறித்தவ நிறுவனங்களின் பண உதவி என்று தெரிந்ததும் கொஞ்சம் சோர்வு. என் குடும்பதெய்வமும் மாமிசபலி கேட்பதுதான்.

கொஞ்சநாள் கழித்துப் பார்த்தேன், என் குடும்பதெய்வத்துக்கு கோழியும் கிடாயும் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். நான் கோழி கொண்டுசென்றேன். பக்கத்திலேயே காம்பவுண்டுக்கு வெளியே வேறு ஒரு கல்லில் பலிகொடுக்கும்படிச் சொல்லிவிட்டார்கள். அதன்பின்னர்தான் தெரிந்தது இப்போது நடுத்தரச் சாதிகளில் 90 சதவீதம்பேரும் உயிர்பலி கொடுப்பதை தாங்களாகவே நிறுத்திவிட்டார்கள் என்று. மிச்சபேரும் ஒருதலைமுறைக்குள் நிறுத்திவிடுவார்கள். அப்படியென்றால் எதற்காகப் போராடினார்கள் கம்யூனிஸ்டுகள்”? ஏன் கிறிஸ்தவர்கள் தூண்டிவிட்டார்கள்?

எல்லா கேள்விகளுக்கும் பதிலை மிக விரிவாக இந்நூலில் இருந்து தெரிந்துகொண்டேன். சிறுதெய்வங்கள் வேறு ஒரு ஆன்மீகத்தை அதாவது மெட்டா ஸ்பிரிச்சுவாலிடியை கொண்டவை. அவை தாங்களாகவே மாறிக்கொண்டும் இருக்கின்றன. அவை மைய ஆன்மீகத்துடன் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டும் இருக்கின்றன. அவற்றை பிரித்துப்பார்க்கவே முடியாது. சிவனும் சுடலையும் ஒண்ணு என்று என் பாட்டி சொல்வாள்.

எஸ்.சாமிதாஸ்
-----------------------------------------------------------------------

எழுதியவர் : (10-Feb-19, 4:10 am)
பார்வை : 47

மேலே