உனக்கு நான் வேண்டும்
உனக்கு நான் வேண்டும்
**************""""""""""""****""
அடித்தோய்த மழையின்
கடைசித்துளி முத்தமாக
உனக்கு நான் வேண்டும்!
குளிர்கால இரவில்
கால்வரை படந்திருக்கும் போர்வையாக
உனக்கு நான் வேண்டும்!
சுடுபுழுதி மண்ணில்
என் பாதம் மேல் நீ ஏறி
நான் நடக்க
உனக்கு
நான் வேண்டும்!
அந்த மூன்று நாள் தந்த
வலியில்,
தூக்கம் இழந்த
நிலையில்,
என் மடி சாய்திட உனக்கு
நான் வேண்டும்!
பிடிவாத இரவில்
குலை நடுங்கும்
கனவில்
துகில் விழித்த உன்னை
தலை கோதிட உனக்கு
நான் வேண்டும்!
முழுக்க நனைந்த முந்தானை
முத்தம் வழியும் கூந்தல் மழை
கூதல் விறைப்பு குளிரடங்க
உனக்கு நான் வேண்டும்!
மூன்றாம் மாத முட்டிவயிறு
கொட்டிச் சிந்தும் குமரி அழகு
நொருக்கு தீனி புளியாக""
உனக்கு நான் வேண்டும்!
இளமையை சுற்றி வந்த
கூறைசேலை
சரிகைகள் கண்ணடிக்கும்
இடுப்போரம்
கொசுவம் அள்ளிமுடிய
உனக்கு நான் வேண்டும்!
விடியல் மறைத்த உன்
கருங்கூந்தல்
வெண்பனி பூக்கும்
அதிகாலை
நிறைமாத வயிறு தள்ளாட
கைபிடித்து நடக்க
உனக்கு நான் வேண்டும்!
கதகதப்பான குளிர்காற்று
முகரமுடியாமல் தோற்றுப்போகும்
காற்றில்
நீ விடும் மூச்சு
சிறுகோப்பை தேனீரை
நீ உறிஞ்ச!
நான் ரசிக்க!
உனக்கு நான் வேண்டும்!
ஆக்கம் லவன்