என் மௌனத்தில் அவள்

மலரினும் மெல்லிய என் மனமே
எதற்கு விசும்புகிறாய்?
காதலி கிடைப்பாள், காதல் கைகூடும்,
காவியம் படைப்பாய், மாங்கல்யம் நிலைக்கும்,
காலம் பதில் சொல்லும் என்று கற்பனையில்
அரவனைதாயே அதற்காகவா?
இல்லை,
ஆயிரம் மானுடர்கள் அரங்கிலினும்
அவள் கொலுசொலியின் ஸ்வரத்தை மட்டும்
அறியும் திறனை தந்தர்க்காகவா?
முள்ளின் மேல் பழகவைதாய் அவள் முல்லாய்
குத்துகிறாள் என்று....அதை எண்ணியா?
உன் விசும்பல் எனக்கு புரிகிறது...
என் ஜனரஞ்சகமான வலியே..
அவள் அரைவட்ட முகத்தை பார்த்தே என்
அரை வாழ் நாளை கழிக்கலாம் என்று
தேம்பூட்டிநாயே! அதற்காகவா?
அவள் இல்லாத மணிதுளிகள்
உலகின் இருள் என்று அவளை இதயத்திற்குள்
திணித்து கொண்டாயே....
இரவில் தலையணையை தலைவியாய் ஆக்கினாய்...பகலில் தலைவியை
தெய்வம் ஆக்கினாய்...
ஒன்றை புரிந்து கொள்...
என் மனக்கோட்டை அவளுக்காகவே கட்டப்பட்டது.
அங்கு அவளே வாழ்கிறாள்..அவளே இளவரசி.
அவளே மகாராணி...அவளே எல்லாம்....
அங்கு வேறு யாருக்கும் இடமில்லை.
சகோதரத்துவை அறிய வைத்த என் சகியே..
நீ எழுதிய 100௦௦ பக்க கடிதத்தில் எனை நினைவுக்கு கொண்டுவந்தது....
நீ எழுதிய அந்த கடைசி வாசகம்
"எனை மறந்து விடுங்கள்" என்பது மட்டும்

எழுதியவர் : சரவணன் (28-Jul-10, 6:44 pm)
சேர்த்தது : Saravanan Uthirapathy
பார்வை : 581

மேலே