பகவத்கீதா வெண்பா கர்ம யோகம் 12 சுலோகம் 34 35 36

34 .
இந்திரியங் கள்தமக் கிச்சை வெறுப்புண்டு
இந்திரியங் கள்வயப்ப டாதிருப் பாய்நீயும்
இந்திரியம் உன்னெ திரி !

35 .
குணமிலா தன்தர்மம் சாலச் சிறந்தது
மற்றோர்தர் மத்திலும்தன் தர்மத்தால் மாளலாம்
மற்றோ ரதுபயம்நல் கும் !

அர்ஜுனன் சொன்னது :
36 .
இச்சை இலாஇப் புருஷன் மிகவலிந்து
ஏவப்பட் டும்தூண்டப் பட்டும்பா வம்தனை
ஏன்செய் கிறான்சொல்கண் ணா ?

-----கீதன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Feb-19, 4:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே