வெல்க தமிழ் போட்டிக் கவிதை

தமிழ் செல்லத் தமிழ்
தமிழ் சொல்லும் போதெல்லாம்
தமிழ் வெல்லும் என்றுரைக்கும் ,
எம் பேச்சின் பெயர் தமிழ்
தமிழுக்கும் அமுதென்று பெயர்,
சொல்ல சொல்ல இனிக்குதடா நெஞ்சமெல்லாம்
கேள்வியில் தேனூற, நாவினில் சுவைஉற
மனமெல்லாம் இனிதாகி
இதழ்களிலே இன்பத்தேன் சொரியுதாடா

தமிழால் அதன் மென்மையெனும் உச்சரிப்பால்
உலகிலே சிறந்த மொழி தமிழ் மொழி போல் வேறில்லை
கொஞ்சும் தமிழை மிஞ்சும் அளவில் ஏது மொழி /
அன்பால் , அதன் அரவணைப்பால்,
நம்மவரின் பண்பால், உயர்ந்து நிற்கும் மேன்மையால்
அதற்கு இணையாக மொழி வேறு இல்லை ,
உலகில் அணைத்து இடங்களிலும் தமிழ் வாழ்கிறது
எங்கெல்லாம் தன்குணம் மாறா, தமிழ் மணம் மாறா
வாழ்கின்றானோ தமிழன் அங்கெல்லாம் தமிழ் வேரூன்றிய நிலையில்

உயர்ந்த நிலையில் வாழ்வதால் தான் தமிழன்
தமிழன் என்றோர் இனம், அது தலைமேல் காப்பது கனம்
அந்நியன் தம்மை வென்றிட தரணியில் பிறந்தது தமிழ்
தமிழ் பிறந்தது அழிவதற்கில்லை
அச்சமற்ற தெளிவும், வீரமுற்ற வலிமையும்
நெஞ்சுரமும் , போர்க் குணம் கொண்ட உடல்வாகும்
பின்வாங்கா, முன்னோக்கும் வீரமும்
தமிழனின் கூடவே பிறந்த குணங்களாம்

ஒரு கொற்றைக் குடைக் கீழ் ஆட்சி
அந்நிய ஆதிக்கம் அடியோடு வெறுக்கும்
ஒப்பற்ற நேர்மையுள்ள நெறியாளும் ஆட்சி
தமிழால் காணுது பாரெங்கும்,
தமிழ் என்றும் தயங்காது , தகுதிக்கு மயங்காது
தமிழன்னை பெற்றெடுத்த தமிழ் குழந்தை தமிழே
தமிழ் கருவும் உருவும் பெற்றுத்தான் பிறந்தது .
தான் தோன்றித் தமிழ், தமிழை வெல்ல வேறில்லை உலகில்
தமிழின் பெருமை தமிழனாக வாழ்வது
தமிழனின் பெருமை தமிழ் போற்ற வாழ்வது
வெல்க தமிழ் என்றும் வெல்க தமிழ்
,

எழுதியவர் : பாத்திமாமலர் (11-Feb-19, 12:02 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 88

மேலே