காலிக் குடத்துடன் காவந்து தானோ
 
            	    
                காலிக் குடம் தூக்கி 
காவந்து செய்வானோ.?
காணி நிலம் இருக்கு 
நீர் இல்லாத இடத்தில் 
பயிரிட்ட விதையானேன்..../
நீர் இறைக்கக் கரம் உண்டு /
நீர் கிடைக்க இடம் இல்லையே../
கால் வலிக்க நடை போட்டும் /
காலிக் குடம் நிறம்பவில்லை...!/
நிறை குடம் சுமக்க என் 
இடை காத்திருக்க /
ஏனோ அதன் ஏக்கம் /
தீரவும் வழி கிடைக்கவில்லையே./
காலிக் குடம் தூக்கி /
வேலி தாண்டி விட்டேன்  /.
ஓடை நீர் தேடி உறவுகளோடு
புறப்பட்டேன்../
வாடி விட்டேன்  /
வடித்துக் குடிக்கும் /
அளவும் நீர் கிட்டவில்லை./
காலிக் குடத்தோடு /
காவந்து தானோ காலம் 
பூராவும்  இறைவா?.
	    
                
