அன்பே
![](https://eluthu.com/images/loading.gif)
வேர் தழுவிய
மண்ணின் தழுவல்
உன் தழுவல்
என் பிடிப்பு அன்பே
மரம் தழுவிய
காற்றின் தழுவல்
உன் தழுவல்
என் சுவாசம் அன்பே
உலர் பூமியின்
மழைத்துளி
உன் தழுவல்
என் சூடுதனிக்கும்
அன்பே
கடந்துப் போகும்
காலம்
உன் தழுவலில்
இனிமையாய் வாழ்வை
கரைத்து
போகும் அன்பே!