சொல்லாத காதல் எனக்குள் சுகமாக 555
உயிரானவளே...
உன் விழிகளை பார்த்து
என் காதலை சொல்ல ஆசைதான்...
ஆசைகளும் வாய்ப்புகளும்
எனக்கு ஆயிரம் இருந்தும்...
சொல்லாமலே நான்
தவிக்கிறேனடி சுகமாக...
உன் விரல் பிடித்து காதல்
வலம்வர ஆசை இல்லையடி...
உன் பார்வை படும்
தூரத்தில் நின்று கொண்டு...
காதல் செய்ய
ஆசையடி கண்ணே...
நான் சொல்லி நீ
மறுத்துவிட்டாள்...
அந்த நிமிடம் முதல்...
உன் பார்வை என்மேல்
படாமல் போய்விடுமடி...
சொல்லாத காதல்
எனக்குள் சுகமாக.....

