கல்வெட்டுகள் கட்டுரை

கல்வெட்டுகளை ஆதிமொழியில்
ஆணித் தரமாய் அன்று எழுதி வைத்தனர் ஆன்றோர் பெருமக்கள்,
பத்திரமாய் அழியாத பொக்கிஷமாய்
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து சென்றாலும் அதில் பொறிக்கப் பட்டுள்ள
ஆடசியின் மாற்றங்களும் அவை அமைந்திடும் ரகசியங்களும் ஏடுகளாய் இன்றும் என்றும் அழியா நிலையில் கல்வெட்டுகளில்,
உண்மைக்கு சாட்சி சொல்லும் உயிரூட்டம் குறையாத
எழுத்துக்களே நம் தமிழ் மொழியில் கல்வெட்டுகளாய்,
தமிழ் பிறந்தபோது ஆதிமனிதர்கள் அதனை
மேலோட்டமாய் இலகுவில் பேசக் கூடிய விதத்தில்
சொற்களை உருவகப்படுத்தி உச்சரித்து தமிழை விளங்கிக் கொண்டனர்,

ஆனால் கல்வெட்டில் உள்ள தமிழ் வார்த்தை ஒவ்வொன்றும்
தரம் குன்றாது தமிழ் மொழியின் மேன்மையை
அதன் பொருளை உள்வாங்கி எழுதவோ உரைக்கவோ
பேசவோ ஆட்சி செய்யவோ இயன்ற முறையில் சீர்தூக்கப்பட்டு
தமிழின் புகழை உலகே அறிந்து வியக்க வைத்தது.
கல்வெட்டும் அதை கையாண்ட அறிஞர்களின் பெருமையுமே .
எதிர்கால அரசியல் அமைப்பின் வலுவையும்
கடந்த கோலோச்சின் அடக்கு முறைகளையும் தெரிந்து
அதற்கேற்ப மாற்றங்களும் மன்னர்களும் அமையும் விதங்களும்
ஞானிகள் சொல்வது போல் சற்றும் பிசகாது கல்வெட்டுகளில்
குறித்து வைத்துள்ள தமிழாண்ட அறிஞர்களின்
பெருமையையும் புகழையும் என்னவென்று சொல்வது
இதற்கு எல்லாம் சாட்சி நாம் காணும் கல்வெட்டுகளே
கல்வெட்டுகளும் அதன் ஆணித்தரமான எழுத்துக்களும் என்றால் மிகையாகாது .
நம் எதிர்கால வாழ்வை சீர்தூக்கி பார்க்க வைக்கும்
ஒரு உடைபடா முத்திரையே கல்வெட்டாகும் .


.

எழுதியவர் : பாத்திமாமலர் (18-Feb-19, 1:29 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 1363

சிறந்த கட்டுரைகள்

மேலே