காதல் தவிப்பு
சோள புழுதியில் தடுத்து நின்ற பேரீந்து பெண்ணவளே -என்
ஆணவ திமிரை உடைத்து விட்டு கண்ணடித்து போனவாளே
அறுத்த வயலுக்குள்ளே சிந்திய நெல்மணி முளைப்பது போல
முரட்டு உள்ளத்திலே முளையாய் விதைந்தவளே
எந்தன் உயிரை பறித்து உன் உள்ளங்கை கைகுட்டையாக மடித்து
எடுத்து செல்கிறாய் அழகுதேவதையே
பாசமாய் மிதக்குறேன் உந்தன் காதல் நதியினில்- திக்கற்று
கரை சேர்ப்பாயோ இல்லை கடலினும் தள்ளிவிடுவாயோ
சொல்லு உன் பதிலை சுகமான என் முடிவுக்கு