வார்த்தையின் தேடல்
வார்த்தை அலைபாய்ந்தது
அப்பக்கமா... இப்பக்கமா...
சட்டென்று சீறிச் சென்ற காற்றில்
பிடியிழந்து கீழ்நோக்கி
பிடிப்பேதும் கிடைக்காமல்
வார்த்தைகளை வசமாக்குவோரை தேடி...
தேடி.. தேடி... பார்த்தும்
தேடுதல் முற்றுப் பெறாமல்
ஏக்கங்களுடன் மீண்டும் ஒரு பயணம்
காற்று எத்திசை நோக்கியோ
அத்திசை தேடி
வார்த்தையை பிடிக்கும்
மாயாவியின் அரவணைப்பிற்காக...!