அத்தை மகள் உன்னை

கார்கால மேகத்தைப் போல்
களைத்து வைத்த கூந்தலில் நீ
சூட்டியிருந்த குண்டு மல்லி
கணக்கில்லா ஆசையை என்
மனத்துள்ளே புகுத்தியதுடி

நினைத்தாலே இன்பந்தரும் - உனை
நெஞ்சோடு அணைக்கின்ற
சூட்சூம நாளை எண்ணி
சூத்திரங்கள் பல செய்து
சுறு சுறுப்பாய் காத்திருக்கேன்

ஆற்றோடு செல்லுகின்ற
அளவில்லா வெள்ளம் போல்
ஆசையோடு காத்திருந்து
அத்தை மகள் உன்னை நான்
அணு அணுவாய் ரசிக்கணும்டி
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (20-Feb-19, 3:15 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : atthai magal unnai
பார்வை : 131

மேலே