அழகான காதல் ஒன்று
அழகான காதல் ஒன்று
தழுவுகின்ற காற்றாய் வந்து
அவனை என் மேல் பூசி நின்று
பரிகாசிக்குது தூர சென்று
சுற்றாத இடங்கள் இல்லை
சுற்றத்தாரின் ஏச்சுத் தொல்லை
சூழ்நிலையோ ஆனந்த எல்லை
சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை
அடுக்களையில் வேலையில்லை
அடுத்தகத்து மாமி தொல்லை
அத்தானின் வரவை பார்த்து
காத்திருக்கு இந்தப் பிள்ளை
பித்தான மனமோ இன்று
பேராவல் ஆசை கொண்டு
பீடான எண்ணத்தோடு
பெருமையாக காத்துகிடக்கு.
- நன்னாடன்