தோழர் கவின் சாரலன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி
( தோழர் கவின் சாரலன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி )
மக்கள் மனம் என்றும் ஆனந்த ராகம் பாட
******************************************************************
கள் அமுது எண்ணமுற கன்னமது
பின்னமுற பெண்ணமுதின் சோகமதுவே !
உள்ள மது குடலேற உள்ளமது
தடுமாற வெள்ளமது இல்லமதிலே !
இல்லமதன் தெள்ளமுது பிள்ளைக்கனியமுதை
கொல்லுமது பந்தமது அறுக்குமதுவே !
இல்லமது சிறப்புறவும் இருக்குமது
ஒழித்திடவும் ஆணையிடு தாயேநீ !
(தோழர் கவின் சாரலன் அவர்களின் "பாடுமோ மக்கள் மனம் ஆனந்த ராகம் "
என்ற பதிவிற்கு கருத்திட்ட வகையில் . அவர் வேண்டுகோளுக்கிணங்க
இப்பதிவு )