தோழியே உன் நட்பில் தோற்று போகிறேன்

எனக்கு பிடித்தவைகளையே உனக்கு பிடித்ததாய்

பொய் சொல்லும் போதும் நான் ரசிக்கின்ற

எல்லாம் அழகு என்று வர்ணிக்கும் போதும்

சில கவிதைகளின் பிழையை என் மனம்

நோகாமல் சுட்டிக்காட்டும் போதும்

என் எல்லா கவிதைகளையும் ரசிக்கும்

முதல் ரசிகையாய் நிற்கும் போதும்

எனக்காக உனக்கு பிடித்த ஒன்றை

விட்டு கொடுக்கும் போதும்

நிஜமாய் தோற்று போகிறேன்

தோழியே உன் நட்பில்

எழுதியவர் : rudhran (31-Aug-11, 11:45 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 624

மேலே