என் தோழன்

என் தோழனே

உனக்கென சந்தோஷங்கள்

எதுவும் தனியே இருந்ததில்லை

என்னுடன் நீ பேசியதை விட

எனக்காக நீ பேசியதே அதிகம்

எப்படி சொல்வேன் உன்னிலும்

தாய்மையை உணர்ந்தேன் என்று

யாருக்கும் கிடைக்காத அறிய

பொக்கிஷம் எனக்கு மட்டும் கிடைத்த

உன் நட்பு

தவம் செய்து கேட்டாலும்

கிடைக்காத வரங்கள் பல

ஆனால் நான் தவம் செய்யாமல்

கிடைக்க பெற்ற வரம் நீ

என் சந்தோஷத்தில் பங்கெடுப்பாய்

என் சோகம் மறைத்து சிரிக்க வைப்பாய்

என் குருந்செய்தியிலே என் மன நிலை அறிவாய்

இன்னும் வார்த்தை

தேடி கொண்டுதான் இருக்கிறேன்

உன்னை பற்றி சொல்ல,

வார்த்தைகளுக்கும் பஞ்சம் தான்

உன்னை பற்றி சொல்வதென்றால்

இருந்தும் சொல்கிறேன்

இனி எந்த சென்மத்தில்

நீ நீயாக பிறக்க வேண்டும்

நான் நானாக பிறக்க வேண்டும்

இன்று போல் என்றும்

உன் நட்பு என்றும்

எனக்கு நிலைத்திட வேண்டும்

உன்னை தவிர வேறு யாரால்

என்னை நேசித்து விட முடியும் என்பதால்



















எழுதியவர் : கவி (30-Aug-11, 10:46 am)
Tanglish : en thozhan
பார்வை : 983

மேலே