பசி
பசி
படிக்க ஆசைப்பட்டுப்
பள்ளிக்கூடம் போகல ....
பசித்த வயிறு கேட்க
பெத்தமனசு துடிக்க
பள்ளிக்கூடம் போனேன்
புழுங்கல் அரிசிச் சோத்துல
புழு ஒன்னு ஊறக்கண்டு
புறந்தள்ளி நின்னேன்
என் வயசுப் பிள்ளைங்க
ஓட்டை டவுசர்காரனுன்னு சொல்லி
என் கால் சட்டையில
அஞ்சல் ஒன்னு போட்டபோது
மனசொடிஞ்சு நின்னேன்
உச்சி சூரியன் சுட்டெரிச்சபோது
சூடு தாங்காம
வாழைமட்டை செருப்புப்போட்டேன்
இதை எண்ணியெண்ணி
மனம் கசந்து
பள்ளி வாழ்க்கையையும் துறந்தேன்
பசிச்ச வயிறு கேட்கலையே
பட்டாசு நான் உருட்ட
என் வாழ்க்கையும் உருண்டது
தீயென்ற பேய் பிடித்து
ஆட்டும் போது
பெத்தவள மட்டுமல்ல
மொத்தத்தையும் நான் இழந்து
பாதி உடல் கருகித்தான்
உசுரோட நான் துடிச்சேன்
என் பசியென்னும் இரவு
விடியுமான்னு தோனல
இருக்கின்ற பிள்ளைங்க
பணம் இருக்கின்ற பிள்ளைங்க
நீங்க கொஞ்சம் மனசு வச்சா
இம்மாதிரிப் பிள்ளைங்க
வாழ்க்கையும் விடியும் !!!
-பாரியூர் தமிழ்க்கிளவி