பெற்றோரின் பெற்றோரே

பெற்றோரின் பெற்றோரே !



கருவிலும் கண்கொண்டு காத்தவளே !

கடவுள் தந்த பரிசோ நீ பாட்டி ! என் பாட்டி !

தாலேலோ பாடி என்னை தாலாட்டிட

தவம் நுறு செய்தேனோ ! நான் செய்தேனோ !



உச்சி முதல் பாதம் வரை

முகர்ந்திட்ட காட்சியெல்லாம்

உள்ளுக்குள்ளே ஓடுதம்மா ஊற்றாக

நிலவைக் காட்டி சோறூட்டும் விதம் கண்டு

நிலவும் ஏங்குதம்மா சோறுண்ண !



தத்தித்தத்தி நான் நடக்க சிரித்தவரே !

என்னோடு என்றும் வருபவரே ! தாத்தா என் தாத்தா !

தோள் மேலே தூக்கியென்னைப் பாராட்டிட

வரம் நூறு பெற்றோனோ ! நான் பெற்றோனோ !



நுங்கு வண்டி செஞ்சு தந்து

மகிழ்ந்த்திட்ட காட்சியெல்லாம்

கண்ணுக்குள்ளே ஓடுதம்மா கனவாக

கவிதை பாடி கதை சொல்லும் விதம் கண்டு

கவிஞனும் ஏங்குவான் கவி பாட ....



கண்ணாமூச்சி நான் ஆடக் கண் மூடினாய்

கனவொன்று கண்டேனே உனைப் பிரிய

என் செய்வேன் ! நான் என் செய்வேன் !

கனவாய் மட்டும் இது நடக்க

கடவுளை நாளும் தொழுவேனே !

உனைச்சேர ! நான் உனைச்சேர !


பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : பாரியூர் தமிழ்க்கிளவி (24-Feb-19, 2:43 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
Tanglish : petrorin petrore
பார்வை : 28

மேலே