பிரிவு
பிரிவு
தாயின் பிரிவு
நோயில் படுக்கும் போது ....
தந்தையின் பிரிவு
கடனில் மூழ்கும் போது ....
தோழியின் பிரிவு
மனச்சுமையின் போது ....
கணவரின் பிரிவு
விதவைக்கோலத்தில் நிற்கும் போது ....
மகளின் பிரிவு
மறுவீடு செல்லும் போது....
மகனின் பிரிவு
முதியோர் இல்லத்தில் இருக்கும் போது....
உயிரின் பிரிவு
அரைஞாண் கயிறு அறுக்கும் போது ....
பாரியூர் தமிழ்க்கிளவி