நாமக்கல்கவிஞர்
நாமக்கல்கவிஞர்
செந்தமிழ் நாட்டின்
செந்தமிழ்ப் பாவலரே!
சிந்தையினால் வாக்கினால்
செய்கையினால்
செங்குருதி தோய்த்து
சித்தரமிட்ட ஓவியரே!
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடாவென்று
தமிழரைத் தட்டியெழுப்பியவரே!
தில்லியில் நிகழ்ந்த சித்திரத்
திருவிழாதன்னில் தான்வரைந்த
திருவோவியக் காட்சியாம்
இந்தியத் தாயே
இங்கிலாந்துக் கோமகனுக்கு
முடிசூட்டுவது போன்றும்
அருகில்அரசியார்
இருப்பது போன்றும்
தீட்டிய ஓவியமன்றோ
பெற்றது கனகப் பதக்கம்!
காங்கிரசுக் கட்சியின்
கனகத் தலைவனாய் நின்று
தண்டிவழிப் பயணத்தில்
கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று வருகுதென்று
விடுதலைக் கனலை வாரியிரைத்து
வீறுகொண்டு எழுந்தவரே !
தம்மரசைப் பிறர் ஆளவிட்டுத்
தாம் வணங்கிக் கைகட்டி நிற்கலாமோ ?
என்று கவி பாடி மக்களை
எழுப்பிய கவியோவியரே !
தவறியற்றியவனைத்
தன்னெஞ்சறியத் தூக்கிலிடும்
தலைவனாய் இன்றி
தாமே திருக்குறள் வகுப்பியற்றி
தவறு தன்னை உணர வைத்தவரே!
சிறை சுவாசத்திலும்
மலைக்கள்ளனை அரங்கேற்றி
அற்புதம் படைத்திட்ட
அருந்தமிழ்ப் பாவலரே !
நீரிறைத்த வித்தால்
யாம் நீக்கமற வளர்ந்தாலும்
நினது பாதை நோக்கி
நீள்கிறது எம்வெற்றிப் பயணம்
வாழ்க ! எம் தலைவரே !
நாமக்கல் கவிஞரே !
வாழ்க ! உம் புகழ் !
நாமக்கல் கவிஞரின் புகழ் !
பாரியூர் தமிழ்க்கிளவி