நகைச்சுவை
ஒரு மிகப் பெரிய கூட்டம்
அதற்குள் நகைசுவை
மேடையில் பேசுவதற்கு ஒவ்வொருவராக அழைக்கப்படுகிறார்கள்
அதில் ஒருவருக்கு அவ்வளவு மரியாதையும் மதிப்பும்
அவர் பெயரை சொன்ன நேரத்தில் பலத்த கரகோஷம் ,
இதைப் பார்த்த மதிப்புக்குரிய அந்த மனிதர் மிக மகிழ்ச்சியுடன் எல்லோரும் அமைதி, அமைதி என்று அன்புடன் கட்டளை இட்டார். அத்துடன் அந்த வளாகத்தில் அமைதி நிலவியது
மக்கள் அவரது பேச்சைக் கேட்க அவ்வளவு ஆர்வம் , என் நேசத்துக்குரிய மக்களே உங்களனைவருக்கும்
என் பணிவார்ந்த வணக்கம் என்றார் , எல்லோரும் ஆவலுடன்.... ஆனால் அவர் குரல் கரகரக்க அவரால பேச முடியவில்லை ,
எல்லோருக்கும் வணக்கம் ,எல்லோருக்கும் வணக்கம் என்று மீண்டும் மீண்டும் தேய்ந்துபோன ரெகார்ட் தட்டு மாதிரி கேட்டது அவர் குரல் , இது என்ன சோதனை/ ஏன் இப்படி / அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை வெட்கமும் அவமானமும் அவரை மேடைவிட்டு இறங்கச் செய்தது , ஊருக்கு உபதேசம் சொல்லும் பல்லியும் ஒருநாள் கூழ் பானைக்குள் , இது புரியாத மனிதன் இவ்வாறே. இது நகைச்சுவைதான் , எனினும் உண்மை சம்பவம் இது ,