யாவரும் வசை பாட செய்யிணும்
அணியாய் அபாயம் அணிவகுத்து வரிணும்
அண்டங்கள் யாவும் இருண்ட நிலை ஆயிணும்
வளர்த்த யாவும் வம்பு செய்ய நிற்பினும்
வாய்மையால் நம் நிலை வரிய நிலை அடையினும்
வலம் வந்தோர் யாவரும் வசை பாட செய்யிணும்
இந்நிலை காரணம் யாதென்று நோக்கையில்
அணுவளவு தன்னிலையை அழகாக மாற்றி இருந்தால்
ஒருத்தரின் பெரும் சொத்தை ஏமாற்றி
பெருத்தவருக்கு ஒப்படைக்க உதவியிருந்தால்
பெருத்த வாழ்வு நம்மை பெரும்வாறு பிடித்திருக்கும்
இது சொத்துக்கு மட்டுமின்றி உலக சுகத்துக்கெல்லாம்
அதை தவிர்த்து நாம் கற்ற நாணயத்தோடு வாழ
நினைக்கும் நல்லவர் அனைவருக்கும் நிலையிதுவே.
-........நன்னாடன்