உதவாக்கரை எழுத்தாளாகிய என்னை பற்றி
என்னைப் பற்றி உனக்கென்ன தெரியும்?
அடே! உன்னைப் பற்றி தெரியாதா?
படிப்பதாய் பாசாங்கு செய்தாய்.
பன்னிரெண்டு பாடங்களே தோற்றாய்.
வேலைக்குச் செல்லாமல் தாய், தந்தையை வேதனைப்படுத்துகிறாய்.
உதவாக்கரை எழுத்தாளனென்று இணையத்திலே உலா வருகின்றாய்.
அட போடா டேய்!
தெரியும்.
உன் சாதகமே புரியும்.
எழுத்தாளர்களெல்லாம் போற்றப்படுகின்ற நிலையை கவர்ச்சி எழுத்துக்களாலே அடைந்தார்கள்.
நீயோ கவர்ச்சியின்றி உண்மை என்றாய்.
எழுத்தை விற்க மறுப்பு தெரிவித்தாய்,
பெற்றதென்ன உதவாக்கரை எழுத்தாளர் எங்கிற பாசாங்கு.
ஆம், நீ வேசம் போடுகிறாய்.
அட போடா டேய்!
தெரியும்.
உன் சாதகமே புரியும்.
தண்டச் சோறுண்டு தண்டமாய் வளர்ந்து தண்டமாய் திரிந்து தண்டமாய் எழுதி தண்டமாய் வாழும் உனக்கு அன்புடன் மித்திரன் என்று புனைப்பெயர் வேறு.
மடையில் கணம் இருந்தால் மட்டுமே எழுத்தும், கவிதையும், கட்டுரையும் என்பதை அறியாது எழுதும் பிள்ளைப்பூச்சி எழுத்தாளனாக நீ இருக்கிறாய்.
உன்னைக் கண்டு உலகமே சிரிக்கிறது.
உன் எழுத்துகளெல்லாம் குப்பைகளாய் மதிக்கப்படுகின்றன.
அட போடா டேய்!
தெரியும்.
உண்மையைச் சிந்தித்தால் தானே புரியும்.