கறுப்பு மரப்பாச்சி அழகி

கறுப்பு மரப்பாச்சி அழகி....

நெஞ்ச கிறங்க வைக்கும் பனமரக் கள்ளு
நெருங்கினா தைக்கும் நெருஞ்சி முள்ளு
ஏட்டிக்கு போட்டியா ஏதானும் செஞ்சி
எகத்தாளமா பேசும் இவசொல்லு பள்ளு

வெளிப்பூச்சு இல்லா வெள்ளந்திச் சிரிப்பு
வெடிக்கும் பருத்தி வெண்பஞ்சு மனசு
கள்ளமிலா கலகலப்பு கண்டாமணிப் பேச்சி -இவ
கச்சிதமா செதுக்கின கறுப்பு மரப்பாச்சி

உச்சிக்கிழான் வெப்பத்தையும் தணிய வைக்கும் பார்வ - அது
உழச்சுக் குடிச்சக் கஞ்சா போக்கிடும் சோர்வ
கண்டாங்கி சீலக்கட்டி வீதியில உலாவரா
காளைகள் மனசை எல்லா கசக்கிப்போட்டுப் பிழியுறா...

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (1-Mar-19, 7:59 am)
பார்வை : 52

மேலே