நட்பின் ஆழம்

முதல் மேஜையில் நீ,

கடைசி மேஜையில் நான்.
பேசிக்கொள்ளும் தூரம்தான்,
ஆனால் பேசமுடியவில்லை.
பார்த்துக்கொள்ளும் தூரம்தான்,
ஆனால் பார்க்கமுடியவில்லை.
நீ என்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்,
நான் உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் போதும்,
நம் நட்பு எவ்வளவு ஆழம் என்று காட்டுவதற்கு!!!
இந்த நினைவு பேச்சையும் பார்வையையும் தாண்டியது.
முதல் மேஜையில் நீ இருந்தால் என்ன,
கடைசி மேஜையில் நான் இருந்தால் என்ன.
உன் வலியை என்னாலும்,
என் வலியை உன்னாலும் உணரமுடிகிறதே.
இந்த உணர்வே போதும்,
நம் நட்பு எவ்வளவு ஆழம் என்று காட்டுவதற்கு!!!
முதல் ஆக நீயும்,
கடை ஆக நானும் இருக்க வேண்டும்.
இடை என்று எதுவும் இருக்கக்கூடாது.

எழுதியவர் : தமிழச்சி (2-Mar-19, 8:23 am)
பார்வை : 1851

மேலே