நிற்க வைக்கும்

நீண்ட புல் என்றாலும்
நிழல் தராது
ஆனால் ஆடு, மாடுகள்
அந்த புல்லை மேயும்
பால் சுரக்கும்
பசுவின் மடி நிரம்பும்,
கறக்கும் பாலை
குடிக்கும் மக்களுக்கு
சீமைப்புல்
சத்து உணவாகும்
நிழல் தராத புல்—நம்மை
நிமிர்ந்து நிற்க வைக்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (3-Mar-19, 9:08 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : nirga vaikkum
பார்வை : 50

மேலே