கருவாச்சி நீ கரிசல் காட்டு காதல் புறா

கரிசல் காட்டு காதல் புறா
கருவாச்சி ! நீ கரிசல் காட்டு காதல் புறா

பச்சை மாங்கனி உன் கன்னம்
குழி விழும் நேரம்

வெண்ணிற பற்கள் ஒளிவீசும் மங்கள சிரிப்பு

மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்
குயில் பாடும் உன் சிரிப்பொலி கானம்

உன் பாதம் மன்னைத் தொடும்
அலங்கார கொலுசும் ஊஞ்சல் ஆடும்

தாவணி சொருகும் இடுப்பின் ஓரம்
ஒரு விதமான கிரக்கம் எனக்கு அதுவே போதும்

வா வா என்றழைக்கும் உன் கூந்தல் வாசம்
கருத்தவளே களவாடிவிட்டாய் இதுதான் என் நேசம்

கீச் கீச் குரல் என்பர் ஆனால்
நான் ரசிக்கும் கருதக்கிளி இசைஎன்பேனே என் தேனே

கண்ணா பின்னா நடனமாடினேன் காதல் ரோஜா நீ
கண்டும் காணாது என்னை பார்த்து சிரித்தபோது

விடிய விடிய வசனம் இல்லை விடிந்தபின்
தொடர்வதும் இல்லை

கோபம் இல்லை அழுகை இல்லை வருத்தமும் இல்லை

ஒளித்துவைப்பேன் என் காதல் மறைமுகம் ஆனால்
என்றும் என் நெஞ்சில் உன் ஒரே முகம்

கனவில் தோன்றும் விண்மீன் நீ

உன்னை என்றும் ரசித்துகொன்டே இருக்கும்

நான் ஒருதலை காதலன் ......

எழுதியவர் : சங்கீத் ஜோனா (3-Mar-19, 2:47 pm)
சேர்த்தது : சங்கீத் ஜோனா
பார்வை : 1155

மேலே