அறியாமை
தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு!
தக தகவென ஒளிரும் விளக்கின் ஒளிதான்
தன் உயிருக்கு முடிவென்பது விட்டில் பூச்சிக்குத்தெரியாது!
நொடிக்கொருமுறை கண்சிமிட்டி களித்திருக்கும்
தாரகைக்குத் தெரியாது தன் தலைவன்
பகலவனின் நிழல் என்று!
முக்கோடித் தேவராலும் மூவராலும் வெல்லப்படாய் என
வரம் பெற்ற தசமுகனுக்குத்தெரியாது ஒரு புல்லால்தான்
தனக்கு முடிவென்று!
தான் ஆற்றும் பயனுக்கேற்ப அவரவர் வாழ்வு அமையும்
என அறியா மாந்தர் .