நரையும், மூப்பும்

நரையும், மூப்பும் நாம் சொல்லி வருவதில்லை,
நலமாய் இருந்தாலும் வாராமல் இருக்கப்போவதில்லை,
நன்று என்று கொண்டால் எல்லாம் நலமே,
நம்மால் மட்டும் ஆவது ஏதும் இல்லை,
வளம் மட்டும் வளர்ச்சி என்று கொண்டால்,
வயதின் முதிர்ச்சியும் வளம் என்று கொள்வோம்,
மனத்தளர்ச்சி இன்றி, ஒருவர் தயவும் இன்றி,
வாழ்க்கை அமைதல், பெரும் பலன் என்றே
நினைத்தல் பயன் ஆகும்.

எழுதியவர் : arsm1952 (5-Mar-19, 4:37 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 93

மேலே