அத்தாட்சியானது துவாய்த்துண்டு

அத்தாட்சியானது துவாய்த்துண்டு

பருவ மழை பொழியத்தொடங்க உழவர்கள் உழுத ஆரம்பிப்பார்கள் அந்த நேரத்தில் ஊரிலிருந்து வயல் செய்யும் இடத்துக்கு சமைப்பதற்கு உரிய சாமான்கள் அனைத்தும் எடுத்து போய்விடுவார்கள் சிலர் அங்கேயே வாழ்கின்றவர்களும் உண்டு அன்றொருநாள் வயல் வேலைக்காகவும் காவல் பார்ப்பதற்காகவும் அருளம்பலம் ஊரிலிருந்து தேவையான பொருட்களை அவனுடைய துவிச்சக்கர வண்டியின் அடிகரியலில் கட்டி வயலுக்கு போக ஆயுத்தமாகின்றான்
அப்போது அவனுடைய கடசி மகளை தூக்கி முத்தம் கொடுத்தபடி செல்லக்கதைகள் அவள் பயில புன்னகையோடு கேட்கின்றான் அதே நேரம் மூத்தவனும் இரண்டாவது மகனும் ஓடிவந்து அணைத்தபடி என்ன வாங்கி வருவிங்க அப்பா என்று கேட்கின்றார்கள்...
உங்களுக்கு பிடித்த சாப்பாடு எல்லாம் வாங்கி வருகின்றேன் ஆனால் நீங்கள் அம்மாவை கரைச்சல் படுத்தாமல் இருக்கணும் பள்ளிக்கு ஒழுங்கா போகவேண்டும் என்று தலையை தடவிக்கொண்டு அறிவுரை கூற இருவரும் தலையை அசைத்தபடி நிற்கின்றார்கள்
அப்போது லெட்சுமி நேரமாகுதுகா என்று சொல்ல சூரியனை பார்த்துவிட்டு மிதிவண்டியில் முன்கம்பியில் கடைசி மகளை வைத்துவிட்டு ஈருருளியை தள்ளுகின்றான் லெட்சுமி முன்னால் போக பின்னால அருளம்பலமும் பிள்ளைகளும் பின்னால் கடப்படி மட்டும் சென்றார்கள் பார்த்து கவனமாக போய்த்துவாங்க எல்லாச்சாமானும் எடுத்து வைத்திருக்கின்றேன் ஓகோ உங்கள் துவாயை தர மறந்திட்டேன் நில்லுங்க என்று எடுத்துவந்து கொடுக்கின்றாள் அவன் சந்தியை கடக்கும் வரைக்கும் பார்த்துகொண்டு நின்று விட்டு வீட்டுக்குள் செல்லுகின்றார்கள்/
அந்த நேரத்தில் மணப்பிட்டி எனும் இடத்தில இலங்கை இராணுவத்தின் பெரிய முகாம் ஒன்று இருந்தது அதால போறவங்க வாறவங்க எல்லார்கிட்டயும் கொட்டியை கண்டாத என்று அரட்டிக்கொண்டு நிற்பானுங்க அதால போறது வாறது என்பது அக்கினியை கடப்பது போன்ற உணர்வு தான் கடவுளை மனசில நினைத்த படியே செல்வார்கள்.
அடிக்கடி இயக்கம் வந்து சுட்டுவிட்டு போறதும் பிறகு இராணுவம் சுடுவதும் வழமையாக இருக்கும் அன்று மனித நடமாட்டமே இல்லை எந்தவிதமான சத்தமுமின்றி எதையோ விழுங்க பதுங்கிய முதலை போல கிடந்த அந்தசாலை ஏதும் அறியாமல் போன அருளம்பலத்தை காவலரனில் நின்ற கொடிய அரக்கன்
அடோய் இங்க வா என்று குரல் கொடுத்தான் துவிச்சக்கர வண்டியை விட்டிறங்கி கொக்கட்டிச்சோலை தான்தோன்றி அப்பனை வணங்கிய படி தொண்டையில் நீர் வற்றிப்போக வார்த்தையும் கரகரத்த குரல் எழுப்ப அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கூறுகின்றான்.
இது என்னது எல் ரீ ரீ க்கு கொண்டு போறது தானே..? இல்லை ஐயா... இது வயல் வேலைக்கு கொண்டுபோற சமையல் சாமான் .என்று சொல்ல... தலையை ஆட்டி அதட்டிக்கொண்டே சாமான்களை உதறிதள்ளுகின்றான்
ஏய் உள்ள போறது என்று உத்தரவு விடுகின்றான்( அத்துள்ள அறைங் யண்ட) சிங்களத்தால் அவன் சொல்ல உள்ளே இருந்தவன் வந்து கூட்டி போகின்றான்
அங்கு போனதும் உள்ளே ஆறுபேர் அநியாயமாக கொல்லபட்டு கிடக்கின்றார்கள் அவர்களை கண்டவுடன் அவ்விடத்திலே அவன் பாதி இறந்துவிட்டான் அதில் ஒருவன் வந்து வெறித்தனமாக அருளம்பலத்தை போட்டு அடிக்கின்றான் எந்த கேள்வியுமே கேட்கவில்லை கொட்டி கொட்டி என்றவாறே இரும்பு பொல் ஒன்றால் மயங்கிய நிலையிலும் அடித்து போடுகின்றான் உணர்வு இழந்த வெறும் கட்டையாகவே கிடக்கின்றான்
அப்போது இன்னுமொரு அப்பாவித்தமிழன் இவனைப்போன்று பிடிபடுகின்றான் அவனுக்கும் இவனைப்போன்று அடி விழுகின்றது ஏழாவதாக பிடிபட்ட அருளம்பலத்தின் உதடுகள் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தது
ஒருவன் வந்து அவனுடைய சப்பாத்துக் காலால் முகத்தை தூக்கி என்னவேணும் என்று கேலியாக கேட்கின்றான் அப்போது தண்ணீ.... தண்ணீ என்றபடியே முணுகல் கேட்டது
அடுத்ததாக பிடிபட்ட பிரகாசத்தை கைகால் கட்ட பட்டு அடித்து பாதியிலே விட்டு போகின்றான்
அருளம்பலத்தின் காலின் பெரிய விரல்களை பிணைந்த வாறு எட்டாவதாக் பிடிபட்ட பிரகாசத்தை பார்த்து இவர்களை போல நீயும் கிடக்க போறா என்று சொல்ல சோழன்குலை கார்ந்து கொண்டிருந்த இன்னொரு கொடிய அரக்கன் பிரகாசத்தின் முகத்தை நோக்கி எறிந்தவுடன் பிரகாசம் தலை குனிய அது அருகாலே போய்விழுந்தது இல்லாவிட்டால் கண் போயிருக்கும்.
அருளம்பலத்தை தலைகீழாக கட்டி தொங்க விட்டார்கள் ஒரு ஐந்து நிமிடத்துக்கு பிறகு ஒருவன் வந்தான் அவன்தான் பெரியவன் அருளம்பலத்தை ஆட்டி விட அவன் உடல் அங்கும் இங்கும் போனது அரை உயிர் தான் மிச்சம் இருக்கு அருளம்பலம் நான் அப்பாவி அப்பாவி என்று அனுங்கி கொண்டு இருந்தான் அதன் பிறகு அவன் கொண்டு வந்த இரும்பு கம்பியால் அருளம்பலத்தின் பின் தலையில் ஒரே ஒரு அடிதான் போட்டான் உடனே இரத்தம் குளம் உடைத்து பாய்ந்தது போல வடிந்தது அதோடு அருளம்பலத்தின் உயிர் அடங்கிப் போனது.
பிரகாசத்தை பார்த்த படி அந்த பெரிய கொடியவன் சொல்லுகின்றான் (எயா வகே மேயாவ தாண்ட)இவனைப்போலவே இவனை கட்டு என்று சிப்பாயிடம் உத்தரவு போட்டு விட்டு உள்ள செல்லுகின்றான்.
உடனே அவன் வந்து பிரகாசத்தின் பெரிய விரலினை வரிந்து கட்டுகின்றான் அப்போது கடவுளை வேண்டிக்கொண்டே இன்றோடு எம் வாழ்வு முடிகின்றது தப்புவது என்ற நம்பிக்கை ஒரு துளியும் இருக்கவில்லை என்று எண்ணிக்கொண்டே இருந்தான் பிரகாசம் அதே நேரம் இன்னொரு ஆமி வருகினான் பிரகாசம் அதால போறதும் வாறதும் தெரியும் அவனுக்கு அடேய் இவன் அப்பாவி இவன் கட்டை அவிழ்த்து விடுங்க என்று கடுமையான குரலால் சொல்லுகின்றான் கடவுள் வந்து காப்பாற்றியது போல பிரகாசம் மட்டும் தப்பி வருகின்றான் மற்ற ஏழுபேரின் உடல்களை அந்த கொடிய மிருகங்கள் உண்டு விட்டதா? இல்லை எரித்து விட்டதா? என்று மாயமாகவே எந்த ஆதாரமும் இன்றிப்போனது.
வழியனுப்பிய அன்பு மனைவி பிள்ளைகள் ஏதும் அறியாது வழமை போலவே இருக்கின்றார்கள் பிரகாசத்தின் நிலையறிந்து பார்க்க போனவர்களிடமும் வயலுக்குள் போன பிள்ளைகளின் தாய் மாரும் மனைவிமாரும் என்னநடந்தது என அறிய சென்ற பொழுது பிரகாசம்
எனக்கு பெரிசா அடையாளம் தெரியல உள்ளுக்கு போனதும் ஒரே இருட்டாக தான் இருந்தது அங்க ஒரு ஆள் அணுகி கொண்டே கிடந்தாரென பிரகசம் சொல்லுகின்றார் அது அருளம்பலத்தின் மனைவியின் காதுக்கு எட்டுகின்றது பேதலித்து போனவள் இவரரும் போனவரே என்று வீரிட்டு தலையில் அடித்தபடி அழுதாள் மறுநாள் காலையில் காணாமல் போனவர்களின் உறவுகளுடன் லெட்சுமியும் சேர்ந்து போகின்றாள் அங்கு இருந்த கொலைவெறியர்கள் இப்படி யாரும் நாங்க பிடிக்கவில்லை என்று விரசி விட்டார்கள். என்ன நடந்திருக்கும் என்று பதறிப்போனார்கள் அப்போது அருளம்பலம் தோளில் போட்டிருக்கும் துவாய் துண்டை நாய் இழுத்து ஓடுவதை காணும் போதே அவள் உரக்க சத்தமிட்டு அழுதாள் அந்த படுபாவிகள் என்ட புருசனின் கட்டையையாவது காட்டுங்களண்டா என தலைவிரித்த கோலத்தோடு வருகின்றாள்
வீட்டை அடைந்த லெட்சுமி வெந்நீரில் விழுந்த புழுவாக துடித்தாள் கடசிக்குட்டி ஏன் அம்மா அழுறா என்ற படியே அதுவும் சேர்ந்து அழுதது முத்தவனும் இளையவனும் அப்பாவுக்கு என்ன ஆச்சி அம்மா என்ற படியே அழுதார்கள் இனி அப்பா வரமாட்டாரா அம்மா என்று கேட்டன் முத்தவன் இல்லை மகனே என்று அழுதாள் அப்போ நமக்கு அப்பா இல்லையா அம்மா என்றவுடன் இன்னும் சத்தமிட்டு அழுதாள் கைம்பொஞ்சாதியாக்கிய கண்கெட்ட பாவிகள் என்று திட்டித்தீர்த்தாள்
ஆனால் பிரகாசம் சொன்னதை வைத்து இழந்தவர்கள் நம்பியும் நம்பாமலும் இறுதிக்கடமைகளை முடிப்பதைத் தவிர வேறு வழியின்றி போனார்கள்
அருளம்பலத்தின் மறைவு லெட்சுமியை தாயை இழந்த குழந்தை போல மாற்றியது அன்றே உழைத்து அன்றே குடும்ப செலவினை பார்க்கும் குடும்பம் அது கணவனை இழந்து அந்து பிஞ்சுகள் மூன்றையும் எப்படி பார்க்க போகின்றாள் என்று நினைத்தாலே பரிதாபமாக இருக்கு என புலம்பினார்கள் வந்தவர்கள் எல்லோரும்
சாவின் கடமைகள் முடியும் மட்டும் எல்லோரும் ஒன்றாக கிடந்தார்கள் முடிந்ததும்
லெட்சுமியும் மூன்று பிள்ளைகளும் என இனிமையை பறித்து தனிமையை கொடுத்தது அவள் விட்ட கண்ணீருக்கு எந்த நிவாரணமும் ஈடுகொடுக்க முடியாது லெட்சுமியின் தலையிலே குடும்பத்தின் சுமை அழுத்தியது
வீட்டு வேலை என்றும் அரிசு குத்தி விற்பதென்றும் தனது குழந்தைகளின் பசியை போக்கினால் எத்தனையோ நாள் இருந்த உணவை பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு பட்டினியாக கிடந்திருக்கின்றாள் எல்லோரும் விதியென்று பேசும் போதெல்லாம் இது விதியில்லை சதிகார வெறியர்கள் செய்த மதிகெட்ட வேலை என்றே புலம்புவாள்
சில வருடங்களுக்கு பிறகு மூத்தமகன் ஆதவன் படிப்பை இடை நிறுத்தி விட்டு குடும்ப சுமையை தாங்கினான் மூத்த ஆண்மகன் என்பவன் அடுத்த தந்தையை போன்றவன் அந்த பிஞ்சி வயதில் சுமக்க முடியாத சுமைகளை தூக்குகின்றான் அவன் இளைமை செலவழித்து இளையவர்களின் இன்னல்களை போக்கின்றான் அதன் பிறகு லெட்சுமி ஒய்வானாள் இருந்தாலும் அருளம்பலத்தின் நினைவால் மனதளவில் உடைந்து விட்டாள்./

எழுதியவர் : மட்டுநகர் கமல்தஸ் (6-Mar-19, 10:36 am)
பார்வை : 96
மேலே