யூகம்

ஜனசந்தடியான குறுகிய தெருவில் முகமெல்லாம் வியர்த்து போய் எதனையோ இழந்த பரிதவிப்பில் ரகு கண்களை கீழே தவழ விட்டபடி நடந்து கொண்டிருந்தான்...

அவன் கண்கள் நாலாபுறமும் கீழே தேடிக் கொண்டே சென்றது... யாராவது என்ன என்று கேட்கமாட்டார்களா என்ற ஏக்கம் அவனுடைய கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது..

யாரும் ஆள் அரவமற்ற நீண்ட நெடிய வீதியில் அப்போதுதான் நுழைந்தாள் திவ்யா.. அழகு பதுமைதான்... தன்னுடைய பொன்னிறத்திற்கேற்ப மஞ்சள் உடையில் ஜொலி... ஜொலித்துக் கொண்டு. முகம் பளிச் சென்று இருந்தது... மிக உற்சாகமாக நடைபயின்று வந்தாள்...ஏதேர்ச்சையாக அவள் கண்கள் சுவரின் ஓரத்தில் செல்ல ஏதோ ஒன்று அவளுடை கண்களை உறுத்தியது...
கீழே குனிந்து எடுத்தால் அது ஒர் பர்ஸ்...

அச்சச்சோ... யாரோ தவறவிட்டு விட்டார்களோ என்று முனகிக் கொண்டே திறந்து பார்த்தாள், அதில் ஒரு அழகான வாலிபனின் படம்....

ரகு தன்னுடைய நினைவுகளை மீண்டும் ஓட விட்டான் எங்கே தொலைத்திருப்போம்... இதற்கு முன் வந்த தெருவில் தொலைத்திருப்போமோ...? என்ற எண்ணத்துடன் வேகமாக நடைபோட்டான்.. அதோ அந்த திருப்பம் தான் என எண்ணங்களை சூழல விட்டபடி விரைவாக எட்டு வைத்தான்..

கையில் பர்ஸ் எண்ண செய்வது சரிபோய் பார்ப்போம், கிடைத்தால் கொடுத்து விடுவோம் என்ற எண்ணத்தில் அதோ திருப்பம்...

வேகமாக ரகு, தலையை குனிந்தபடி சிந்தனையில் படபடப்புடன்...

அதவேகமாக திவ்யா ஏதோ சிந்தனையில் மனக் குழப்பத்துடன்....

எதிர்பாராமல் இருவரும் டமார்... என்று மோதிக் கொண்டனர் திருப்பத்தில்...

அப்புறம் என்ன நடந்திருக்கும்.....
நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள், உங்களுடைய யூகம் தானே முக்கியம்.....

எழுதியவர் : சா.மனுவேந்தன் (6-Mar-19, 8:30 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 309

மேலே