உடல் கண்ட மேனிக்கு
சுறு சுறுப்பு உன் உடலில் இருந்தால்
வெற்றிச் சூழல் உன்னை எளிதில் பற்றும்
பட படப்பு உன் மனதில் வந்தால்
படிப்படியாய் வாழ்வின் அமைதி குறையும்
சல சலப்பாய் சுற்றம் மாறிப் போனால்
சகலவிதமான நோய்கள் தோன்றும்
அனுதினமும் குடும்ப பெண்கள் அழுதால்
ஆற்றல் அங்கே அற்றுப் போகும்
கன கனப்பான தொழில் சூழல் இருந்தால்
உடல் கண்ட மேனிக்கு துவண்டு போகும்
பர பரப்பாய் நடக்கும் தொழிலில்
பலவாறு தவறுகளே மிகும்
தொண தொணப்பாய் பேசும் மனிதர்
அறிவின் ஆழம் அறியா நிலையைப் போன்றோர்
_ நன்னாடன்