நினைவேந்தல்
நிகழ்வுகளினூடே
எண்ணப்பறவை
சிறகை விரிக்க
நேற்றுக்கும்
நாளைக்கும்
இடையே நான்....
மறக்க வேண்டியதை
நினைத்தும்
நினைக்க வேண்டியதை
மறந்தும்
காலத்தின்
தகிடுதத்தங்களில்
நான் நானாகிப்
போயிருந்தேன்
நினைவு ஓட்டம்
முட்டித் திரும்புகையில்
கண்ணீர் திவலைக
ளிரண்டு கன்னம்
பட்டுத் தெரித்தது
வாழ்க்கைக்கும்
வாழ்விற்குமாய்....