பெண் பறவை

சிறகு விரித்த வண்ணப் பறவை ஒன்று
சிறகிழந்து நிற்கிறது
அடை காத்த அன்னைப் பறவை
அழுது புலம்புகிறது
தத்தி நடந்து இரைதேடும் சிறு பறவைக்கு
ஊட்டி மகிழ்கிறது அன்னைப் பறவை
கூட்டினுள் அடைக்கும் அவசியமற்றுப் பாேன சிறுபறவை
தாயின் சிறகுகளுக்குள் மறைந்து தான் தூங்குகிறது
சிறகிழந்த பறவை என்று விட்டுப் பாேகுமா கழுகுகள்
பிணமாகிப் பாேனாலும் அது பெண்பறவை தானே
ருசிக்கும் கழுகுக்கு ஊனென்ன உடலென்ன....

எழுதியவர் : அபி றாெஸ்னி (12-Mar-19, 12:29 pm)
Tanglish : pen paravai
பார்வை : 3769

மேலே