மனைவியின் டைரி

காதலிக்கும் போது கவிஞன் ஆகும் காதலனை போல்
கல்யாணத்திற்கு பிறகு மனைவியும் எழுத்தாளரே
டைரி எழுத்து எழுத்தாளர் ....

மனம் என்னும் பதிப்பகத்தில்
ஆசை என்னும் தலைப்பினில்
கணவன் என்னும் நூலகத்தில்
வெளியிடப்படும்...

கணவனுக்கு எது நேரம் அவளுடன் பேச
அவளுக்கோ போதவில்லை நாளும்
அவனை நேசித்திட ......

கணவனின் காதலை சொல்லும் மனைவியின் டைரி
அவனிடம் சொல்ல ஆசையை சொல்லும் மனைவியின் டைரி

இணைத்துடன் விளையாடும் கணவனுக்கு
மனைவியின் இதயத்துடன் வினைப்பிரிய நேரம் இல்லை

ஆசையின்றி அவனும் செய்யவில்லை ..
அவன் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை

அவனுக்காக துடிக்கும் ஒவ்வொரு நொடியும்
அவளுக்காகவே என்னும் அவனது பார்வையும்
வர்ணிக்கப்படும் மனைவியின் டைரி .

எழுதியவர் : லதா தமிழ் (12-Mar-19, 12:26 pm)
சேர்த்தது : lathatamil
Tanglish : manaiviyin dairy
பார்வை : 167

மேலே