என் தோழன் முகிலன் எங்கேடா

என் தோழன் முகிலன் எங்கேடா

காற்று மழை வந்தாலும் பொதுநலனுக்காக நில்லாமல் உழைத்த
என் முகிலன் எங்கேடா
பூகம்பம் கண்விழித்தாலும் பொதுநல புயலாய் உருவெடுக்கும்
என் முகிலன் எங்கேடா
மணல் திருட்டை கை நீட்டி கேட்டாய்
இன்று உன் கையை கட்டி உன்னை திருடியது யாரடா
பொதுவாய் உண்மையை பேசியதுதான் குற்றமோ
என் முகிலன் எங்கேடா
சமூகத்திற்க்காக நீ குரல் கொடுத்தாய்
உன் சம்பவத்திற்கு யாரடா குரல்கொடுப்பது
நம் தேசத்தில் மட்டும்தான் போராளி எல்லாம் கோமாளியாக்கப்பட்டு
பின்பு ஏமாளியாக்கப்படுகிறார்கள்


சமூக சிந்தனை உள்ள ஒருவனையும் இச்மூகம்
எங்கேடா என்று சிந்தனை செய்ய வைத்துள்ளது
இதுதான் நேர்மைக்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி


என் முகிலன் எங்கேடா.....

வரிகள் :- கண்ணீருடன் தமிழ்நாடு

எழுதியவர் : (12-Mar-19, 11:27 am)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 41

மேலே