விட்டில் பூச்சிகள்

மாற்றம் என்றழைத்து
மடமைதனை கொளுத்தாமல்
ஏமாற்றம் அதனை
ஏற்றமாக கொண்டு
வாழ்வை தொலைக்க
வழி தேடும் விட்டில் பூச்சிகள்...

பாசமுடன் பழகிட
நேசமுடன் உருகிட
அன்புடன் வழிநடத்திட
ஆயிரம் உறவுகள் இங்கிருக்க....
உறவுகளை புறந்தள்ளி
முகமரியா நட்புக்களின்
மதிமயக்கும் வார்த்தைகளில்
மதிமயங்கி சென்றீரோ...

கயமை கொண்டு
கற்பை சூரையாட
காதல் கன்னிகளுடன்
காமூகர் சிலர்...

சட்டம் தான்
சாய்ந்து போய்விட
சாயங்கள் வெளுத்து போய்விட
சத்தமில்லா உன் கண்ணீர்களுக்கு
சாட்டையும் தான்
கசையடி சாட்டையும் தான்
சுழற்றுவது யாரோ...?

வெகுளியாய் வேடமிட்டு
பெற்றோருக்கு...
வெகுமதி தான் அளித்தீரோ...
நல் வெகுமதிதான் அளித்தீரோ...?
என்றுதான் விழிப்பீரோ...
ஏற்றம் தான் காண்பீரோ..
ஏமற்றுபவரை தவிர்ப்பீரோ...?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (12-Mar-19, 6:35 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : vittil poochchigal
பார்வை : 410

மேலே