உன் மூச்சில் நான் வாழ
உன் சிகையின் வாசனை
எனக்குள் போதை தரும் தூரத்தில் நான்
எப்போதும் வாழவேண்டும்..
உன் சுவாசத்தின் சூடு
என் இதயத்தை தடவும் தூரத்தில் நான்
எப்போதும் உறங்க வேண்டும்..
மதத்திற்கு அப்பாற்பட்ட நம் காதல்
எனக்குள் இருக்கும் வரை மட்டுமே
என் உயிர் என்னிடம் இருக்க வேண்டும்..