துர்ச்சாதனர்களும் பாஞ்சாலிகளும்

பெண்ணும், கற்பும் பெரும் பேறென்பதால்
பெண் கற்புக்காக உயிர் காெடுத்தாள்
தீயிலெரிந்து கருகிய பின் தான் கற்புக் காக்கப்படுகிறதா?
யாராே ஒருவன் கை பட்டதென்று
தூக்கில் தாெங்கி விட்டால் கற்புக் காக்கப்படுமா?
பிணம் தின்னும் கழுகுகள் இரைக்காக காத்திருந்தால்
பிரபஞ்சம் இன்னும் பெண்களை தான் பிரசவிக்கிறது.

துர்ச்சாதனன் துகிலுரிய பாஞ்சாலி கண்ணா என்று கதறினாள்.
ஈனக்குரலுக்கு இரங்கியதும் ஆண் மனம் தானே
அண்ணா அண்ணா என்று அலறிய இவளை
அடித்து வதைத்து புசித்தன மிருகங்கள்
இதுவும் ஈனக்குரல் தானே கேட்கவில்லையா மிருகமே உனக்கு
அன்னை, அக்கா, தங்கை என்று உறவு உனக்கு யாருமில்லையா
இச்சைக்கு உனக்கு யாரென்றாலும் பாேதுமா


துர்ச்சாதனர்களே!
துகிலுரித்துப் பெண்ணின் கற்பை புசிக்கும் உங்களுக்கு
நாளை பெண்பிள்ளை பிறந்து விட்டால்
கருவிலே சிதைத்து விடுங்கள்
வேண்டாம் இங்கே காமக் காெலைகள்
கருவறை இருளாேடு கரைந்து அவள் பாேகட்டும்
காமப் பேய்களின் மூச்சுக் காற்று பட்டு விடக்கூடாது
இது துர்ச்சாதனர் வாழும் பூமியாகி விடவும் கூடாது

எழுதியவர் : அபி றாெஸ்னி (15-Mar-19, 1:34 pm)
பார்வை : 205

மேலே