நம்பிக்கை
கல்லைக் கடவுள் சிலையாக்கி
கோவில் கட்டினோம் நிலையாக்க,
எல்லை யில்லா அருள்பெறவே
எடுத்துக் கருவறை வைத்ததையே
எல்லா நாளும் பூசைசெய்ய
ஏற்க வைத்தோம் அர்ச்சகரை,
கல்லில் கடவுள் நம்பிக்கைதான்
கோவில் அர்ச்சகர் ஆசியுமே...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
