கண்களே கண்களே
உன்னை எண்ணி எண்ணி
நான் இருக்க
நீ என்னை எண்ணி இருக்க
ஏங்காதோ கண்கள்
கண்களே கண்களே எதற்கும்
கலங்காதே
கண்களை நம்பித்தான் காதல்
களத்தில் இறங்குகிறது
காதலின் துன்பமும் துயரமும்
கண்களுகே
கண்களே கண்களே உள்ளத்தில்
உண்மையின் ஊற்றாக இருந்துவிடு
அன்பினை அள்ளி கொடுத்துவிடு
ஆறுதல் நீதான் புரிந்துவிடு ,
காதலின் இருப்பிடம் உள்ளமே
அதுவே பாவம் என்ன செய்யும் /
நல்லது நினைப்பதும் உள்ளமே
நலிவில் சோர்வதும் உள்ளமே ,
கண்களை நம்பும் உள்ளத்தில்
கறைபடியாது காத்துக்கொள் கண்களே
கண்களே கண்களே காண்பதும் நீயே
காட்டிக் கொடுப்பதும் நீயே,
காதல் கொள்வதும் நீயே,
காப்பாற்றிக் கொள்வதும் நீயே,