ஐந்தும் ஆர்ப்பரித்தால்
பூதங்கள் ஐந்தும் இவ்வுலகின் வாசல்கள்
துவாரங்கள் ஒன்பதும் நம்முடலின் மூலங்கள்
பூதத்தின் பாதங்களால் இப்பூவுலகு வாழ்கிறது
துவாரங்களின் துணையால் உடல் தொய்யாமல் உள்ளது
ஐந்தும் ஆர்ப்பரித்தால் ஆரும் தடுக்க இயலாது
ஒன்பதும் ஒடுங்கி போனால் உயிர் வாழ முடியாது
பூவுலகில் உயிர்வாழ பூதங்களே ஆதாயம்
ஓடுகின்ற உயிர் நிலைக்க துவாரங்களே பிரதானம்
பாரினை பாதுகாக்க பூதங்களை காத்திடுவோம்
தோலுடலை வளர்த்திடவே துவாரங்களை போற்றிடுவோம்.
----நன்னாடன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
